Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மகள் கண் எதிரே…. “அப்பா செய்த கேவலமான செயல்”…. மகளிடமும் எல்லை மீறியதால் பாய்ந்தது குண்டாஸ்..!!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் வசித்து வருபவர் ஒரு தொழிலாளி. இவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டுக்கு கள்ளக்காதலியை அழைத்து வந்து தன்னுடைய மகள் கண் எதிரில் சந்தோஷமாக இருந்துள்ளார். மேலும் அவருடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தொழிலாளியின் மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து தொழிலாளியை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜேஷ் கண்ணன் தொழிலாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம்  பரிந்துரைத்தார். இதை தொடர்ந்து  கலெக்டர் தொழிலாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய  உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |