Categories
தேசிய செய்திகள்

மகள், கண் முன்னே உயிரிழந்த தந்தை… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… நெஞ்சை உலுக்கும் காட்சி…!!

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சொந்த ஊர் மற்றும் உறவுகளால் ஒதுக்கப்பட்ட கூலித் தொழிலாளி தன் மனைவி மற்றும் மகள் கண்ணெதிரே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் கிராமத்தை சேர்ந்த ஆசிரி  நாயுடு என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் சொந்த ஊருக்கு சென்றார் .சொந்த ஊருக்கு அவரை உறவினர்கள் உள்பட யாருமே சேர்க்கவில்லை. மேலும் சொந்த ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அவர்களை தங்குமாறு கிராமத்தினர் தெரிவிக்க ஊருக்கு வெளியே ஒரு குடிசை போட்டு தங்கியுள்ளார்,

ஆனால்  உடலை பராமரிக்க தேவையான எந்த வசதியும் செய்யவில்லை. மேலும் மருத்துவ சிகிச்சை எதுவும் எடுத்துக்கொள்ளாத நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமானது. மூச்சுத்திணறல் காரணமாக நிலைகுலைந்து கீழே விழுந்தார்.   மகள் அவருக்கு தண்ணீர் கொடுப்பதற்காக சென்றபோது அவரது தாயே தடுக்க முயல்கிறார். ஆனால் மகள் அந்த தண்ணீரை ஊற்ற தந்தை இறந்து போகிறார்.

இறந்துபோன அப்பாவை தொட்டு அலுவலதற்கு மகள் முயற்சிக்கும்போது எங்கு மகளுக்கும்  தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் அவரது தாய் அவரை தடுத்து நிறுத்துகிறார். அடுத்த சில மணி நேரத்திலேயே அவர் உயிர் போய் விட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடைசிநேர பாசப் போராட்டமும், கொரோனாவின் கோர முகமும் காண்போரை நெஞ்சை உலுக்குகிறது.

Categories

Tech |