மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூதனூர் பகுதியில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன்-நல்லம்மாள் தம்பதியினர் தங்களது பேரனான இன்பரசன் என்ற சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.