Categories
மாநில செய்திகள்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி மறைவு – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வயிற்றுப் பேத்தியுமான திருமதி லலிதா பாரதி அம்மையார் அவர்கள் (94) வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.

மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாளின் மகளான திருமதி லலிதா பாரதி அவர்கள் 40 ஆண்டுகளாக இசை ஆசிரியராக பணியாற்றியவர் என்பதோடு பாரதியாரின் பாடல்களை இசை வடிவில் பரப்பும் தமிழ் பணியிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைசிறந்த தமிழ் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான திருமதி லலிதா பாரதி அவர்களின் மறைவால் வாடும் அவர் தம் உறவினர்கள் தமிழார்வலர்கள் உள்ளிட்டோர்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |