Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகள்…. கூடும் பக்தர்கள் கூட்டம்….!!

மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், திருப்புவனம் புவனேஸ்வரர்- சௌந்தரநாயகி அம்மன் கோவில், சோழபுரம் சிவன் கோவில், கள்ளல் சோமசுந்தரேஸ்வரர்- சௌந்தரநாயகி அம்மன் கோவில், களையார்கோவில், சொர்ண காளீஸ்வரர் கோவில், மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோவில், கண்டதேவி ஸ்ரீ சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில், திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில், பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோவில், சிவபுரி பட்டி தான்தோன்றீஸ்வரர் கோவில், எஸ் வி மங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோவில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில், கரிசல்பட்டி கைலாசநாதர் கோவில், உலக பட்டி உலக நாயகி சமேத உலகநாதன் சுவாமி கோவில், உள்ளிட்ட கோவில்களில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதைப்போல் இந்த ஆண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு வருகின்ற 1-ஆம்  தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சுவாமிகளுக்கு பால், பலம், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், திருநீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |