- குறிக்கோளை அடையும் முயற்சியில் தான் மகிமை இருக்கிறது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை.
- நீங்கள் எதை செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.
- நல்ல குடும்பத்தை போன்று வேறில்லை, ஒழுக்கம் மிக்க பெற்றோர்களை போன்ற ஆசிரியர்களும் இல்லை.
- பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது, பெருக்கத்தான் முடியும்.
- சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.
- உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.
- மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்கள் ஆகிவிட முடியாது.
- கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே குருடன்.
- கடவுள் விண்ணிலும் இல்லை, மண்ணிலும் இல்லை, உள்ளத்தில் தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.
- செல்வம், குடும்பம், உடம் முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறி தள்ளி விடும்போது, நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.
- துணிவு இல்லையேல் வாய்மை இல்லை. வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை.
- எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன்.
- தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்குதான் ஒழுக்கம் தொடங்குகிறது.
Categories