மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு இந்து கோவிலின் முன்பாக காந்தி சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் உடைத்ததோடு சில ஆபாச வார்த்தைகளையும் எழுதி வைத்துள்ளனர். இதேபோன்று ஆகஸ்ட் 3ஆம் தேதியும் சிலை உடைக்கப்பட்டு ஆபாச வார்த்தைகள் எழுதி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து 2-வது முறையாக சிலை உடைக்கப்பட்டதோடு ஆபாச வார்த்தைகளும் எழுதப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க அரசாங்கம் உரிய முறையில் விசாரணை செய்து சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.