Categories
தேசிய செய்திகள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்….. “இவ்வளவு கோடி செலவா?”…. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்….!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.5 லட்சம் கோடி செலவு செய்தது. அதில் 20% கொரோனா காலத்தில் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தெலுங்கானாவிற்கு ரூ.20 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இந்த திட்டத்தில் பல குளறுபடிகள் இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அவற்றை சரி செய்து அதன் நேரடி பலன் பரிமாற்றம் மூலம் செயல்படுத்துகிறது. இதனையடுத்து வருவாய் உபரி மாநிலமாக இருந்த தெலுங்கானா, தற்போது வருவாய் பற்றாக்குறை மாநிலமாக மாறி உள்ளது. தெலுங்கானாவில் விவசாயிகளின் கடன் அதிகமாக உள்ளது. விவசாயிகள் தற்கொலையில் 4 வது இடத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கானா அரசு மத்திய திட்டங்களின் பெயர்களை மாற்றி மாநிலத்தின் திட்டங்களாக காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

Categories

Tech |