Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மகான் திரைப்படத்தில் விக்ரம், வாணிபூஜன் இணைந்து நடித்த காட்சிகள்”…. நீக்கப்பட்ட நிலையில் புகைப்படம் வைரல்….!!!!!

மகான் திரைப்படத்தில் வாணிபோஜன் நடித்த நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.

“மகான்” திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவருடைய மகனுமான நடிகர் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மகான் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் தயாரித்து உள்ளார். இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் மற்றும் வாணி போஜன் மகான் திரைப்படத்தில் இணைந்து நடித்த காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில் தற்பொழுது நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. வாணி போஜன் படத்தில் நடிக்கும் பொழுது கொரோனா இரண்டாம் அலை காரணமாக அவரது கதாபாத்திரம் முழுமையடையாமல் இருந்ததால் கதாபாத்திரத்தை நீக்குவதை தவிர வேறு வழியில்லை என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி இருக்கின்றது.

Categories

Tech |