Categories
சினிமா தமிழ் சினிமா

மகான் படத்தில்…. “பாபி சிம்ஹா கேரக்ட்டர் இதுதானா”?….. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்…!!!

சமூக வலைதளங்களில் இயக்குனர் கார்த்திக் வெளியிட்ட “சத்தியவான்  பாபி சிம்கா” என்று எழுதப்பட்டியிருக்கும்  புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.

“மகான்” திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவருடைய மகனுமான நடிகர் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருக்கின்றனர். இருவரும் இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு இடையே ஆவல் அதிகமாக உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.மேலும் இத்திரைப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மகான் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் தயாரித்து உள்ளார். இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

மகான் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் பின்னணி பணிகள் மிக வேகமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. திரைப்படம் வருகின்ற  10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்தநேரத்தில் , இப்படத்தில் பாபி சிம்கா  நடித்த கதாபாத்திரத்தினுடைய போஸ்டரை  இயக்குனர் கார்த்திக் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டரில் சத்தியவானாக பாபி சிம்கா  என பதிவிட்டு கதாபாத்திரத்தின் உடைய புகைப்படத்தை கார்த்திக் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில்  வேகமாக பரவிவருகிறது .

Categories

Tech |