நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவள்ர்மங்கலம் பகுதியில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்ற பிறகு தொடர்ந்து 48 நாட்களாக மண்டல பூஜை நடைபெற்ற வந்தது.
இந்நிலையில் மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு மண்டல அபிஷேக பூர்த்தி நவசக்தி அர்ச்சனை மற்றும் மகா சந்தியாகம் நடைபெற்றது. முன்னதாக சுவாசினி, பைரவர் பலி தானங்கள், வடுகபூஜை, தீபாராதனை, கலசாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.