‘மகாமுனி’ பட இயக்குனருடன் நடிகர் ஆர்யா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார் . இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான மகாமுனி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் இயக்குனர் சாந்தகுமார் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை, எனிமி, அரண்மனை 3 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.