Categories
சினிமா தமிழ் சினிமா

‘மகாமுனி’ பட நடிகைக்கு சர்வதேச விருது… குவியும் வாழ்த்துக்கள்…!!!

மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் மஹிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான மகாமுனி படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மஹிமா நம்பியாருக்கு மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து மஹிமா நம்பியார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் ‘மகாமுனி’ படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இயக்குனர் சாந்தகுமார், நடிகர் ஆர்யா, நடிகை இந்துஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். இதையடுத்து நடிகை மஹிமா நம்பியாருக்கு  வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Categories

Tech |