Categories
உலக செய்திகள்

மகாராணியாரின் விருந்து நிகழ்ச்சியில்… கைது செய்யப்பட்ட உறவினரால்… ஏற்பட்ட பரபரப்பு…!!

மகாராணியாரின் விருந்து நிகழ்ச்சியில் உறவினர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டன் மகாராணியாரின் தாயார் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மகாராணியாரின் உறவினரான Simon Bowers lyon என்ற 34 வயதுடைய நபர் Glamis Castle என்ற மாளிகையில் தங்கியிருந்த இளம் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் Simon னிடம் யாரும் பேசாமல் இருந்துள்ளனர். இதனை கவனித்த அந்த இளம்பெண் அவருக்காக பரிதாபப்பட்டு அவரிடம் சென்று பேசியுள்ளார்.

அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அன்று இரவு அவரவர் அறைகளுக்கு உறங்கச் சென்றுள்ளனர். அப்போது இரவில் சுமார் ஒன்றரை மணியளவில் அந்த பெண்ணின் அறை கதவை தட்டும் சத்தம் கேட்டு அப்பெண் கதவை திறந்து பார்த்தபோது Simon நின்று கொண்டிருந்துள்ளார். அவர் உடனே அவசரமான விஷயம் ஒன்றை பற்றி பேச வேண்டும் என்று கூறிக்கொண்டு அந்த பெண்ணை தள்ளிக்கொண்டு அறையினுள் நுழைந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணை படுக்கையில் தள்ளிவிட்டு தவறாக நடக்க முயன்றுள்ளார்.

மேலும் Simon கடுமையான குடிபோதையில் இருந்ததால் இந்த பெண்ணிடம் முறை தவறிய உறவு வைத்துக் கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதனையடுத்து சுமார் 20 நிமிடங்களாக Simonனிடம் போராடி அவரை அறையிலிருந்து தள்ளிவிட்டுளார். அதன்பின்பு ஒருவழியாக அங்கிருந்து தப்பிய அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அதன் பின்பும் இரண்டாவது முறையாக அறையில் நுழைந்த சைமன் இந்த பெண்ணின் ஆடைகளை களைந்து தவறாக நடந்துள்ளார். மேலும் முத்தமிட வந்த சைமனை தள்ளிவிட்ட அந்த பெண்ணை, நாகரீகம் இல்லாத மட்டமான மற்றும் மோசமான பெண் என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணிடம் என் வீட்டிற்குள் நான் எதை செய்ய வேண்டுமென்று நீ சொல்லக் கூடாது என்று கத்தியுள்ளார். இந்நிலையில் அப்பெண்ணின் சத்தம் கேட்டு விருந்தினர் ஒருவர் வந்துள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருந்த அந்தப் பெண் விடிந்ததும் மாளிகையிலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். மேலும் நடந்ததை பற்றி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் Simonஐ கைது செய்துள்ளனர். இதனையடுத்து நீதிமன்றத்தின் முன்பு Simon தன் தவறை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் அவருக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதிக்கபடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |