Categories
உலக செய்திகள்

மகாராணியார் காலமான 90 நிமிடங்களில்…. சீனா நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்….!!

பிரித்தானிய மகாராணியார் காலமான தகவல் வெளியான அடுத்த 90 நிமிடங்களில் சீனா நிறுவனம் ஒன்றிற்கு அந்நாட்டு கொடிகளை தயாரிக்கும் ஒப்பந்தம் கிடைத்துள்ளது.

ஷாங்காய் நகருக்கு தெற்கே அமைந்துள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது எஞ்சிய பணிகளை நிறுத்திவிட்டு, பிரித்தானிய கொடிகளை மட்டுமே தயாரிக்கின்றனர். இங்கு பகல் 7.30 மணிக்கு தொடங்கும் பணியானது 14 மணி நேரம் தொடர்வதாகவும், பிரித்தானிய கொடி மட்டுமே தற்போது அவர்கள் தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் வாரத்தில் மட்டும் 500,000 கொடிகள் தயாரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி கூறியுள்ளார்.

துக்கமனுசரிக்கும் பிரித்தானிய மக்கள் கையில் ஏந்துவதற்கும், வீடுகளில் ஏற்றுவதற்கும் குறித்த கொடிகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. மொத்த விற்பனையாளர்களுக்கு 7 யுவான்(0.87 பவுண்டுகள்) கட்டணத்தில் குறித்த கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றது. சீன நேரப்படி அதிகாலை 3 மணிக்கு முதல் வாடிக்கையாளரிடமிருந்து ஆயிரக்கணக்கில் கொடி தயாரிக்கும் ஒப்பந்தம் குறித்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்களிடம் சேமிப்பிலிருந்த 20,000 பிரித்தானிய கொடிகளை உடனடியாக அனுப்பி வைத்ததாக கூறுகின்றனர்.

இது மட்டுமின்றி, அந்த வாடிக்கையாளர் நேரடியாக நிறுவனத்திற்கு சென்று கொடிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. மகாராணியார் இறப்பதற்கு முன்னர் இந்த நிறுவனத்தில் கட்டார் கால்பந்து உலக கிண்ணத்திற்கான கொடிகளை தயாரித்து வந்துள்ளது. கடந்த 2005ல் இருந்தே செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், உலகின் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய விழாக்களுக்கு கொடிகளை ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வழங்கியுள்ளது. மேலும், இதற்கு முன்னர் பிரித்தானிய ராஜகுடும்ப திருமணங்களுக்கான கொடிகள் தயாரிக்கப்பட்டது எனவும், தற்போது மகாராணியாரின் இறப்பு தொடர்பில் கொடி தயாரிக்கப்படுகின்றது என்றார் நிறுவன மேலாளர்.

Categories

Tech |