Categories
உலக செய்திகள்

மகாராணியின் இறுதிகாலம் வரை நிழல் போல…. கூடவே வலம் வந்த நபர்…. யார் அவர்….? வெளியான சுவாரசிய தகவல்கள்….!!

மறைந்த பிரித்தானிய மகாராணி மற்றும் தற்போதைய மன்னர் சார்லஸ் உடனே எப்போதும் உடனிருந்து கவனம் ஈர்க்கும் மெய்க்காப்பாளர் ஒருவர் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேஜர் ஜானி என்கிற ஜோனதன் தாம்சன் தான் ராஜ குடும்பத்தை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் ஈடுபட்டு வருகின்றார். 2-ம் எலிசபெத் ராணி கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளின் போது ஜானி அவருக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தார், இப்போது அவர் சார்லஸுடன் அதே பணியை செய்கின்றார்.

காண்போரின் கண்களை முதலில் ஈர்ப்பது அவருடைய ஆடைகள் தான். பின்னர் ஜானியின் அழகான மற்றும் ஆஜானுபாகு தோற்றம். சிலர் அவரை Major Eye Candy’ என்றும் அழைக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மகாராணியின் பவள விழாவின் போது ஜானி பலரின் கவனத்தை ஈர்த்தார். பிரித்தானியாவின் Morpeth நகரில் பிறந்த அவர் தற்போது சரே கவுண்டியில் வசிக்ன்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |