Categories
உலக செய்திகள்

மகாராணியை 2 முறை தனியாக சந்தித்த இளவரசர்…. உண்மையை உடைத்த அரண்மனை…. இறுதி சடங்கில் நடந்த பேச்சுவார்த்தை….!!

பிரித்தானியாவில் இளவரசர் ஹரி தனது தாத்தாவினுடைய இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவால் திடீரென்று காலமானார். இதற்காக அமெரிக்காவிலிருக்கும் இளவரசர் ஹரி மட்டும் தனது தாத்தாவினுடைய இறுதி சடங்கிற்கு பிரித்தானியா சென்றார். ஏனெனில் அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதற்கிடையே ராணியாருடைய கணவரான பிலிப் உடல்நல குறைவால் மருத்துவமனையில் இருக்கும்போது இளவரசர் ஹரி தன்னுடைய தந்தையாருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அதன் மையக் கருத்தாக விளங்குவது “இளவரசர் ஹரியாகிய நான் அரச குடும்பத்தை அனுசரித்தே நடப்பேன்” என்பதாகும். இதனையடுத்து இவர் மொத்தமாக பிரித்தானியாவில் 9 நாட்கள் தங்கியுள்ளார். அதில் 2 முறை இளவரசர் ஹாரி தனது பாட்டியான ராணியாருடன் தனியாக சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அதில் அவர் தங்களுடைய குடும்ப பிரச்சினைகளை பற்றி பேசவில்லை என்று அரண்மனை சுற்றுவட்டாரம் கூறியுள்ளது. மேலும் இவர் அரச குடும்பத்திலிருக்கும் சில நபர்களுடனும் பேசினார். இதனையடுத்து ராணியாருடைய பிறந்தநாளிற்க்கு பின்னர் இளவரசரான ஹரி தன்னுடைய மனைவியின் சூழ்நிலையை உணர்ந்து அமெரிக்கா திரும்பியுள்ளார்.

Categories

Tech |