மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி கட்சி மூலம் 3வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நிலையில் இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று 4,814 பேர் குணமடைந்த நிலையில், இன்று 5063 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல, மொத்த இறப்புகள் எண்ணிக்கை 723-ல் இருந்து 775 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் இன்று 6ஆயிரத்தை தாண்டியுள்ளது. ராஜஸ்தானில் 2,034 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,852 பேரும், தமிழகத்தில் 1,755 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,621 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.