மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் படுகாயமடைந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த 3 நாட்களுக்கு புனே, நாசிக் மற்றும் ரத்தனகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தானே மாவட்டத்தில் உள்ள கிராம புறங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை நேற்று கொட்டி தீர்த்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதனால் தற்போது வரை மின்னல் தாக்கி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. தானே மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் நேற்று ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அம்மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருப்பதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. விலை பயிர்கள் அனைத்தும் வயலில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.