மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இருவர், முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல தமிழத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குணமடைந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட் செய்துள்ளார்.
டெல்லியில் இருந்து ரயிலில் வந்த உத்தரபிரதேச வாலிபர் கொரோனா பாதிப்பில் இருந்து திரும்பி வருவதாக
இன்னும் 2 நாட்களில் அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என அவர் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா சிகிச்சைக்காக 350 படுக்கைகளுடன் கூடிய ஓமந்தூரார் மருத்துவமனை வெள்ளிக்கிழமை முதல் செயல்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிரா, தமிழகத்தில் சிலர் குணமடைந்து வருவது நம்பிக்கையை தருகிறது.