Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி கலையப் போகிறதா?….. அரசியல் களத்தை கிளப்பிய சஞ்சய் ராவத்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில அமைச்சராக உள்ள சிவனேசனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது ஆதரவாளர்களுடன் குஜராத் மாநிலம் சுரத்திற்கு சென்றார். அதனைத் தொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கிடையில் ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமை கொறடா பதவியில் இருந்து விலகி சிவசேனா உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமைச்சர் உள்ளிட்ட 22 பேர் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப்பெற்றால், முதல்வர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மை இழப்பதோடு மட்டுமில்லாமல் ஆட்சியே பறிகொடுப்பார்.

இந்த விவகாரம் மகாராஷ்டிரா மாநில அரசியலில் தீயை கிளப்பி உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் சிவனேசா கட்சி மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவும் தற்போதைய அரசியல் திருப்பங்கள், சட்டப்பேரவை கலைக்கபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படுத்தி வருகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு 46 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நொடிக்கு நொடி அரசியல் அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன.

Categories

Tech |