Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் போலீசாரை விரட்டியடிக்கும் கொரோனா… ஒரே நாளில் 195 பேர் பாதிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது.அம்மாநிலத்தில் கொரோனா வின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிர வேகம் எடுத்து வருகிறது.அங்கு கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தை எட்டியுள்ளது.கொரோனா பாதிப்பிற்கு எதிராக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் துறைகளில் ஒன்றான காவல்துறையை சேர்ந்தவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,581 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 256 போலீசார் இறந்துள்ளனர். மேலும் 21,862 போலீசார் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,462 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |