மகாராஷ்டிரா மாநிலத்தில் மதுபானம் கிடைக்காததால் சானிடைசர் குடித்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சனிடைசரை பயன்படுத்துதல் போன்றவற்றை கடைபிடிக்க கூறியுள்ளது.
ஆனால் பல மாநிலங்களில் மக்கள் மதுபானம் கிடைக்காததால் சனிடைசர் குடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதுபோன்று தான் மகாராஷ்டிராவில் மதுவுக்கு பதிலாக கிருமி நாசினியைக் குடித்த 6 பேர் உயிரிழந்தனர். கொரோனா காரணமாக அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் யாவத்மால் என்ற மாவட்டத்தில் வாணி என்ற இடத்தில் மதுபானம் கிடைக்காத ஏக்கத்தில் 6 பேர் இணைந்து கூட்டாக சானிடைசரை அருந்தியுள்ளனர். இதனையடுத்து அந்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.