Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்ஹர் என்ற மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 11.57 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் கட்டடங்கள் சற்று அதிர்ந்தது. இதனால் பயந்து போன மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்தனர். நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |