மகாராஷ்டிராவில் காலை நிலவரப்படி இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது. இருப்பினும் பலரின் ரத்த மாதிரிகள் முடிவு இன்னும் வெளிவரவில்லை. எனவே வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை மட்டும் கிடைத்த தகவலின் படி, மகாராஷ்டிராவில் 10 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர், ” முதலில் மும்பையில் ஒருவருக்கும், புனே மற்றும் புல்தானா பகுதிகளில் தலா இருவருக்கும் மொத்தமாக 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். தற்போது கிடைத்த தகவலின் படி, மும்பையில் மேலும் 4 பேருக்கும், புனேவில் மேலும் ஒருவருக்கு கொரோனா இருபத்தி உறுதியாகியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.