Categories
அரசியல்

மகாராஷ்டிர அரசை கவிழ்க்க முயற்சிக்கும் மத்திய அரசு – சஞ்சய் ராவத்..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா காங்கிரஸ் கூட்டணி அரசே குறுக்கு வழியில் கவிழ்க்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் ஆளும் கூட்டணி ஏம்ஏல்ஏக்கலை சிபிஐ அமலாக்கப் பிரிவு மிரட்டுவதாகும் சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.சஞ்சய் ராவத்  மகாராஷ்டிரா அரசு குறுக்கு வழியில் கவிழ்க்கும் சதி திட்டத்தை பாரதிய ஜனதா ஈடுபட்டுள்ளதாகவும் இதற்காக பாஜக தலைவர்கள் தன்னையும் தொடர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

அரசியல் கொள்கையில் தான் உறுதியாக இருப்பதாக தனது மனைவிக்கு மத்திய அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பி இருப்பதாகவும் அவர் புகார் கூறினார். மேலும்  சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 22 எம்எல்ஏக்களையின் பட்டியலை தயாரித்து வைத்துக்கொண்டு பதவியை ராஜினாமா செய்யும்படி நிர்பந்திப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Categories

Tech |