மகாலட்சுமி குறித்து பேட்டி ஒன்றில் ரவீந்தர் கூறியுள்ளது வைரலாகி வருகின்றது.
விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருக்கின்றது. மேலும் இவர்கள் திருமணம் குறித்து ரோல் மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் மகாலட்சுமி ரவீந்தர் இருவரும் அளித்த பேட்டி ஒன்றில், திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமிக்கு ரவீந்தர் பெரிய பங்களா, ஆடி கார், நகை பரிசளித்ததாக வெளியான செய்தி குறித்து கேட்கப்பட்டது. அப்பொழுது அவர் கூறியுள்ளதாவது, மகாலட்சுமியிடம் ஏற்கனவே ஆடி கார் இருக்கு. அதே போல் அவங்க வீட்டுல நிறைய சேர்த்து வச்சு இருக்காங்க. எனக்கு கல்யாணத்துல இரண்டு மோதிரம் தான் போட்டாங்க என கூறியுள்ளார் ரவீந்தர்.