Categories
சினிமா தமிழ் சினிமா

“மகாலட்சுமி- ரவீந்தர் திருமணம்”…. கடுமையாக விளாசிய நெட்டிசன்கள்…. பிரபல நடிகை சரமாரி பதிலடி….!!!!!

மகாலட்சுமி-ரவீந்தரின் திருமணத்தை விமர்சித்த நெட்டிசன்களை கடுமையாக விளாசியுள்ளார் காஜல் பசுபதி.

விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

திருப்பதியில் நடைபெற்ற இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பங்கேற்றனர். இந்த நிலையில் இருவரும் இணையத்தில் மாறி மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்கள். இப்புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விளாசினார்கள். இதை பார்த்த நடிகை காஜல் பசுபதி பதிலடி கொடுத்து வருகின்றார். நெட்டிசன் ஒருவர் என்னடா கிளிய வளர்த்து, பண்ணிக்கிட்ட கொடுத்துட்டீங்க…. பணம் பண்ற வேலை! என கமெண்ட் செய்திருந்தா.ர் இதை காஜல் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து விளாசியுள்ளார்.

மேலும் மற்றொரு நபர் மனச மணி பர்ஸ்ல ஒளிச்சு வைத்திருப்பார்களோ என கமெண்ட் செய்திருந்தார். அதை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்து காஜல் கூறியிருப்பதாவது, பெண்களே பெண்களுக்கு எதிராக இருக்கும் வரையில் ஆண்களை அசைக்க முடியாது என்று கூறி இருக்கின்றார். மேலும் நயன் விக்கி திருமணம் செய்தாலும் நயன் தான் கெட்டவர். மகா ரவியை திருமணம் செய்தாலும் மகா தான் கெட்டவர். ஆம்பள புத்தியில என கடுமையாக விளாசி உள்ளார்.

Categories

Tech |