8 வயது சிறுவனையும், அவரது 70 வயதான தாத்தாவையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி மகாவீரர் அகாரா பேரணி நடத்தப்பட்டது. இந்த ஊர்வலம் இஸ்லாமிய தெருவுக்குள் சென்றபோது கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை தடுப்பதற்கு போலீசார் முயற்சி செய்தனர். இதனால் 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 8 வயது சிறுவனையும் அவரது தாத்தாவையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தான் எதுவும் செய்யவில்லை என்று கூறிய பிறகும் காவல் துறையினர் அவரை கைது செய்து சென்றுள்ளனர். இதன்பிறகு சிறுவனின் தந்தை அவரின் நடத்தைக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம் என்று தெரிவித்த பிறகு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.