அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி பைடன் மகாவீர் ஜெயந்தியையொட்டி ஜெயின் சமூகத்தினருக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜெயின் மத நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் மக்களுக்கு மகாவீர் ஜெயந்தியையொட்டி நானும், ஜில்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். நாம் அனைவரும் உண்மையை தேடியும், வன்முறையிலிருந்து விலகியும், ஒருவருக் கொருவர் நல்லிணக்கத்துடன் வாழும் மகாவீர்சாமி காட்டிய வழிமுறையை கடைபிடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
ஜெயின் மதத்தில் கடைசி தீர்த்தங்கரராகவுள்ள கடவுள் மகாவீரர் பிறந்ததினம் மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அவர்களது முக்கியமான மத திருவிழாவான இந்நாளில் ஜெயினர்கள் வழிபாட்டில் ஈடுபடுவது மற்றும் விரதம் இருப்பது போன்றவற்றை கடைப்பிடிக்கின்றனர்.