ரவீந்தரின் இன்ஸ்டா பதிவு குறித்து தான் தற்பொழுது இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது.
சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் இன்ஸ்டாவில் ரவீந்தர் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மகாலட்சுமி சூட்டிங்கில் இருக்கின்றார். காலையிலேயே கிளம்பி விட்டார். அவருக்கு புரட்டாசி 1 ஸ்பெஷல் ஆக வெஜிடேரியன் சாப்பாடு செய்து சூட்டிங் ஸ்பாட்க்கு கொண்டு சென்று இருக்கின்றார் ரவீந்தர். “Sunday Family Time” என எல்லோரும் சொல்கின்றார்கள். ஆனால் எனக்கு துரதிஷ்டவசமாக வேறு விதமாக இருக்கின்றது. அன்பே வா சூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் சாப்பாடு எடுத்துச் செல்லும் டன்ஸோ டெலிவரி பாயாக மாறிவிட்டேன். பொண்டாட்டி மகாலட்சுமி சங்கர்…. எல்லா பாத்திரத்தையும் வீட்டுக்கு திருப்பி கொண்டு வந்து விடு. இல்லையென்றால் மாமியார் கொடுமை மட்டும்மின்றி அம்மா என்னையும் டன்ஸோவில் சேர வைத்து விடுவார் என ரவீந்தர் கூறியிருந்தார்.
ரவீந்தர் விளையாட்டாக சொன்னதை இணையத்தில் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இதனிடையே மாமியார் சமைத்துக் கொடுத்த சாப்பாடு சூப்பர் என மகாலட்சுமி கூறியுள்ளார். இப்படி சமைத்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு சாப்பாடு அனுப்பி வைக்கும் அன்பான மாமியார் கிடைக்க மஹாலக்ஷ்மி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறுகின்றார்கள். மேலும் இதே போல எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என வாழ்த்தி உள்ளனர். மருமகளை இப்படி பார்த்துக் கொள்ளும் ரவீந்தரின் அம்மா நிச்சயம் கொடுமை செய்ய மாட்டார். மகாவுக்கு கிடைத்திருப்பது மாமியார் அல்ல இன்னொரு அம்மா என ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.