மகா சிவராத்திரியன்று விரதம் இருந்து சிவபெருமானை வணங்கினால் ஏழேழு ஜென்மங்களிலும் நமக்கு ஏற்பட்ட பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். சிவராத்திரியன்று பெண்கள் காலையில் எழுந்து நீராடி பூஜைகள் செய்துவிட்டு உமிழ்நீரை கூட விழுங்காமல் விரதம் இருப்பார்கள். ஒரு வேளை உணவை மட்டும் சாப்பிட்டு சிவனை மனதார நினைத்து வணங்கினால் எல்லா பாவங்களும் விலகும். காலையில் எழுந்து நீராடி பூஜைகளை முடித்துக் கொண்டு சிவாலயத்திற்குச் சென்று தரிசனம் செய்யலாம். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு பிறகு வீட்டிற்கு வந்து சிவராத்திரி பூஜை க்குறிய இடத்தில் சுத்தம் செய்து மாலை ,தோரணங்கள் இட்டு அலங்காரம் செய்து பூஜை செய்ய வேண்டும்.
இதையடுத்து ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு மலர்கள், பழங்கள், இளநீர் ஆகியவற்றை கொடுத்து வீட்டிற்கு வந்து மறுபடியும் குளித்து விட்டு மாலை பூஜை செய்யவேண்டும். சிவலிங்கத்தை அலங்கரிக்கப்பட்ட இடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். அல்லது கோவிலில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளலாம். விடிய விடிய கண்விழித்து உறங்காமல் தரிசிப்பவர்களுக்கு கர்ம வினைகள் நீங்கும். எதுவும் வாங்கி கொடுக்க முடியாதவர்கள் வில்வம் வாங்கி கொடுக்கலாம். பல பிறவிக்கும் புண்ணியம் கிடைக்கும்.