ராமநாதசுவாமி கோவிலில்,மஹா சிவராத்தி விழாவில் சுவாமியும், அம்பாளும் ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர் .
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலில் மூன்றாம் நாளான சனிக்கிழமை அன்று, காலை 6 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். தெற்கு ரத வீதியில் இருந்து வீதி உலா தொடங்கி ,கெந்தமாதனபர்வதத்தில் உள்ள ராமர் பாதம் மண்டகப்படியில் காட்சியளித்தனர்.
சுவாமி திருவீதி உலா சென்ற போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மாலை 6 மணிக்கு ராமர் பாதம் மண்டகப்படியில் எழுந்தருளிய சுவாமிக்கும் , அம்பாளுக்கும் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. பின் அங்கிருந்து சுவாமி புறப்பட்டு இரவு 10 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. இதன்பிறகு கோவில் நடை மூடப்பட்டது.