சிவகங்கை காரைக்குடி அருகே மகாசிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மகாசிவராத்திரியன்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் காரைக்குடி அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றுள்ளது. அந்த மாட்டு வண்டி பந்தயம் ஆலத்துப்பட்டி-குன்றக்குடி வழியாக நடைபெற்றது. இதில் சின்ன மாட்டு வண்டி பந்தயம், பெரிய மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக மொத்தம் 51 வண்டிகள் கலந்து கொண்டு பந்தயம் நடைபெற்றது. முதலாவதாக 16 வண்டிகள் கலந்து கொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் கே.புதுப்பட்டியை சேர்ந்த அம்பாள் வண்டி முதல் பரிசை பெற்றுள்ளது. அதேபோல் வெளிமுத்தி வாகினி, கல்லல் உடையப்பா சக்தி ஆகியோரது வண்டி இரண்டாவது பரிசையும், புலிமலைபட்டி முனிசாமி வண்டி மூன்றாவது பரிசையும், வல்லாளபட்டி இளந்தேவன் வண்டி நான்காவது பரிசையும் பெற்றுள்ளது.
இரண்டாவதாக 35 வண்டிகள் கலந்துகொண்டு சின்ன மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. அதில் விராமதி தையல்நாயகி கருப்பையா வண்டி முதல் பரிசையும், துழையானூர் பாஸ்கரன் வண்டி இரண்டாவது பரிசையும், பீர்க்கலைக்காடு பைசல் மற்றும் காயக்காடு குமார் வண்டி மூன்றாவது பரிசையும், ஓடித்திக்காடு கைலாசநாதர் வண்டி நான்காவது பரிசையும் பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாவது பிரிவில் நெல்லியாண்டவர் வண்டி முதல் பரிசையும், வெள்ளரிப்பட்டி சமர்சித் வண்டி இரண்டாவது பரிசையம், நெம்மலிக்காடு ஒம்முடைய அய்யனார் வண்டி மூன்றாவது பரிசையும், மணப்பட்டி அசோதையம்மன் வண்டி நான்காவது பரிசையும் பெற்றுள்ளது.