நாமக்கல் கவராநகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு பொதுமக்கள் வந்தார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள என்.கொசவம்பட்டி கவரா நகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவானது வருகின்ற 21ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதனால் பக்தர்கள் நேற்று காவேரி ஆற்றிற்கு சென்று பம்பை, செண்டை மேளம் முழங்க தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றார்கள். மாலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
இவ்விழாவையொட்டி வருகின்ற 15-ம் தேதி குழந்தைகளுக்கான போட்டையும் 20-ம் தேதி நடன போட்டியம், 21ஆம் தேதி திருத்தேர் பூட்டுதல் நிகழ்ச்சியும், மதியம் திருத்தேரில் கலசம் வைத்தல் நிகழ்ச்சியும், சக்தி அளித்தல் நிகழ்ச்சியும், 22ஆம் தேதி அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், பெண்கள் அங்க பிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சியும், 23ஆம் தேதி அம்மன் தேரில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றார்கள்.