இலங்கை நாட்டை சேர்ந்த சிலோன் வர்த்தக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்ளிட்ட சிலர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே, மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர் தான் காரணம் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர்.
கடந்த மாதம் 15-ந் தேதி, இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மேற்கண்ட 3 பேரும் நாட்டை விட்டு வெளியேற ஜூலை 28-ஆம் தேதி வரை தடை விதித்தது. பிறகு இத்தடை ஆகஸ்டு 2-ஆம் தேதி வரையும், 11-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டது. மேலும் இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நேற்று மகிந்த ராஜபக்சே போன்ற 3 பேரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.