கடலில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் கரீம் மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் பலகை தொட்டி குப்பம் பகுதியில் உள்ள கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் சென்ற 9 பேரும் கடலில் மகிழ்ச்சியாக குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த ஒரு ராட்சச அலையில் 4 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிடவே மீனவர்கள் கடலுக்குள் இறங்கி மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சபரி, ஆபான், அம்ரீன் மற்றும் கபீர் ஆகியோர்கள் காணாமல் போனது குறித்து தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மாயமானவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.