அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரில் பார்வையிட்ட காங்கிரஸ் திரு ராகுல்காந்தி தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க உறுதுணையாக இருப்பேன் என கூறினார்.
பொங்கல் பண்டிகையின் சிறப்பு அம்சமாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார். விழாவில் இடையே பேசிய அவர் தமிழ் கலாச்சாரத்தை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கலாசார நிகழ்வுகளை புரிந்து கொள்வதற்காகவே நேரில் வருகை தந்தாக தெரிவித்தார். ராகுல் காந்தி தமிழ் மக்களுடன் இணைந்து கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டியது தனது கடமை என்றும் பெருமிதத்துடன் கூறினார்.