Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சியில் வியாபாரிகள்…. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த பிச்சிப்பூ விலை…!!!!!

ஒரே நாளில் பிச்சிப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வியாபாரிகள்  இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைவாக காணப்பட்டு வந்த நிலையில் திடீரென நெல்லை மலர் சந்தைகளில் உள்ள பூக்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில் நாளை தினம் சித்திரை விசு தமிழ் வருட பிறப்பு பண்டிகைகளை கொண்டாட இருக்கின்ற காரணத்தினால்  பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில் நேற்று மல்லிப்பூ ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்று கிலோ 700 முதல் 800 வரையிலும் பிச்சிப்பூ ரூபாய் ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 1,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.அதுமட்டும் அல்லாமல் ஒரு கிலோ கேந்தி பூ ரூ.80 க்கும், சேவல் கொண்டை ரூ.60க்கும், அரளி பூ ரூ. 100 க்கும் விற்பனை ஆகிறது கனகாம்பரம் ஒரு கிலோ ரூ. 600 க்கும், சம்பங்கி ரூ. 200 க்கும், நாட்டு சம்பங்கி ரூ. 300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேப் போன்று பன்னீர் ரோஜா ஒரு கிலோ ரூ.80 க்கும், பட் ரோஸ் ஒரு கிலோ ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது பண்டிகை கால வழிபாடு நடத்துவதற்காக பூக்களின் தேவை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் காலை முதல் நெல்லை சந்திப்பு மலர் சந்தையில் பூக்களை வாங்க அதிகமான அளவில் ஆர்வம் காட்டி வருவதால் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |