Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மகிழ்ச்சியை கொடுத்த சென்னை….. ஷாக் ஆன தமிழக அரசு …!!

கொரோனா பாதிப்பில் சென்னை மகிழ்ச்சியை கொடுத்தாலும் மற்ற மாவட்டங்களின் பாதிப்பு அரசை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில்,  தமிழகத்தில் 53 அரசு பரிசோதனை நிலையம், 52 தனியார் பரிசோதனை நிலையம் என மொத்த 105 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று மட்டும் 42,531 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனையாக 16,09,448 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும்  4,244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,168 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கு மட்டும் 77,338 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் இன்று மட்டும் 3,617-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 89,532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 64.66 % குணமடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 46,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 17,469 சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,966 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் ஒரு மாதத்திற்கு பின்பு நேற்று கொரோனா தொற்று 1200க்கும் கீழ் வந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அதே போல பதிவாகியுள்ளது சென்னையில் வேகமெடுத்து கொரோனவை கட்டுக்குள் வைத்துள்ளதை காட்டுகின்றது. இது தமிழக அரசுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இன்று மட்டும் 37 மாவட்டங்களிலும் தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |