கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை தடுக்கும் விதமாக திருச்சி சாலை மேம்பாட்டம் கட்டப்பட்டு சமூகத்தில் திறக்கப்பட்டது. இதில் அடுத்தடுத்து விபத்துக்கள் நடைபெறுவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை நடந்த மூன்று விபத்துகளில் மூன்று பேர் பலியாகி இருக்கின்றனர். நேற்றைய தினம் நான்காவது விபத்து நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக திகில் பாலமாக திருச்சி சாலை மேம்பாலம் மாறி இருக்கிறது. மேலும் இதில் செல்வதற்கே பொதுமக்கள் அஞ்சப்படும் நிலை உருவாகி இருக்கிறது.
இந்த பாலம் பற்றி கோவையை சேர்ந்த பிரபல பிரபஞ்ச சோதிட சுடர் பிரசன்ன சாமிகள் கருத்து தெரிவித்திருக்கிறார். அதாவது புதிதாக கட்டி உள்ள திருச்சி சாலை மேம்பாலத்தில் வாஸ்து சரியில்லை. மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு விபத்து தடுப்பான் கண்ணாடிகளை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழக அரசியல் பற்றி முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்னும் நான்கு வருடங்கள் நிலையான ஆட்சியை தருவார். அதிமுகவைப் பொறுத்தவரை தற்போது பொது செயலாளர் ஆகியுள்ள இபிஎஸ் நிலைத்து நிற்பார். மேலும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மாபெரும் தலைவராக உருவாக வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்த பிஎஸ் வேலுமணி தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் வலது கரம் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவரது கட்டுப்பாட்டில் அதிமுகவில் ஏராளமான எம்எல்ஏக்கள் உள்ளன. மேலும் இவரது கட்சியில் இபிஎஸ்க்கு அடுத்து இடத்தில் இருப்பதாக கூறப்பட்டு வருகின்ற சூழலில் ஜோதிடர் பிரசன்ன சாமிகள் தெரிவித்திருப்பது எஸ்பி வேலுமணி ஆதரவாளர்களை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் தொடர்ந்து பேசும்போது தமிழகத்தில் வரும் 2024 ஆம் வருடம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாய்ப்புகள் குறைவு. அதே சமயம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நல்ல சூழல்களும் வெற்றிகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த குபேரீஸ்வரர் ஆலயத்தின் பிரபஞ்ச ஜோதிட பிரசன்ன சாமிகள் இவர் கோவையில் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் பிரபலமாக உள்ளார். குரல் வளம் மற்றும் முகத்தை பார்த்து ஜோதிட பலன்கள் தெரிவிப்பதில் வல்லவர் என புகழப்பட்டு வருகிறார்.