Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி செய்தி..!! கொரோனா தடுப்பூசி இலவசம்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!

மக்களுக்கு தடுப்பு மருந்து இலவசமாக போடப்படும் என்று உதரதேசம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைகள் நடந்து வருகிறது. இந்த மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என பலரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா பீகார் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையில் வெற்றியடைந்தால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக போடப்படும் என அறிவித்தது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பீகார் மக்களுக்கு மட்டும் தடுப்பு மருந்து இலவசம் என வாக்குறுதி அளித்ததால் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா  தடுப்புமருந்து நடைமுறைக்கு வந்ததும் அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் அறிவித்தார். இதுவரை 4,74,054 பேர் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா . தொற்றினால் பாதிக்கப்பட்டு 6,940 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |