Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி! மகப்பேறு விடுப்பு 1 வருடமாக உயர்வு…. அரசாணை வெளியீடு…!!!

அரசு வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழக அரசில் வேலை பார்க்கும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகள் வரையிலும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

கடந்த 2016ஆம் வருடம் ஆறு மாதங்களாக இருந்த மகப்பேறு விடுமுறையானது தற்போது 9 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன், பின் என இரண்டாகப் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விடுமுறை காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும். இதற்கான அடிப்படை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |