Categories
உலக செய்திகள்

மகேஷ்பாபு திரைப்படத்தில் இணையும் ஹாலிவுட் நடிகர்?…. லீக்கான தகவல்….!!!!

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உள்ள மகேஷ் பாபு திரைப்படங்களை தமிழ், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு வசூல் பார்கின்றனர். பான் இந்தியா திரைப்படங்களாக மகேஷ் பாபு படங்கள் மாறியிருப்பதால் இந்தியா முழுதும் அவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர் வெளிநாடுகளிலும் பிரபலமாகி இருக்கிறார். தமிழில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி போன்ற திரைப்படங்கள் மகேஷ் பாபு நடித்த தெலுங்கு படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். அண்மையில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகிய சர்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்திருந்தார்.

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு அடுத்து நடிக்க இருக்கும் புது திரைப்படமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் தோர், அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்து உலகம் முழுதும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தை முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க காடுகளை பின்னணியாக கொண்ட கதை அம்சத்தில் எடுக்கின்றனர். மகேஷ் பாபு, கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் உருவாகும் இப்படத்தை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளார்.

Categories

Tech |