நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.எம்.பி புரொடக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
Team #SarkaruVaariPaata pumped up with the Blockbuster Response for the #BLASTER, Resumes Shoot in Goa with an Intense Fight choreographed by Ram-Laxman Masters 👊
Super🌟 @urstrulyMahesh @KeerthyOfficial @ParasuramPetla @MusicThaman @madhie1 @GMBents @14ReelsPlus pic.twitter.com/frzgbyius0
— Mythri Movie Makers (@MythriOfficial) August 13, 2021
இந்நிலையில் சர்காரு வாரி பாட்டா படத்தின் படப்பிடிப்பு கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.