நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தின் அப்டேட் குறித்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ்பாபுவின் GMB புரொடக்சன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. கொரோனா பரவல் காரணமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
The excitement and anticipation for #SarkaruVaariPaata is in the air! All our upcoming updates will be worth the wait. Until then, Stay safe & Stay healthy. pic.twitter.com/26PH3ENFU0
— Mythri Movie Makers (@MythriOfficial) June 11, 2021
கடந்த மே 1-ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. ஆனால் படக்குழு அதனை மறுத்தது . தற்போது வருகிற ஆகஸ்ட் மாதம் மகேஷ் பாபுவின் பிறந்தநாளில் சர்காரு வாரி பாட்டா படத்தின் அப்டேட் வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த படக்குழு ‘கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தான் இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் அதுவரை காத்திருக்கவும் என தெரிவித்துள்ளது.