Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதா”….. எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!!

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

நேற்று முன்தினம் மின்சார சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி என்.ஆர்.டி நகரில் இருக்கும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக காலை 8:30 மணி அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ தொழிற்சங்க மாநிலத் துணைத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்க தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றார்கள். இப்போராட்டமானது மாலை 5 மணி வரை நடைபெற்றது. பின் மாநில, மத்திய மைய அமைப்புகளின் வழிகாட்டுதல்படி அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவதாக கூறி அங்கிருந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |