Categories
தேசிய செய்திகள்

மக்களவை: “பேரழிவு ஆயுதங்கள்”…. நிதியுதவி வழங்க தடை விதித்து மசோதா அறிமுகம்…..!!!!!

இந்தியாவில் சென்ற 2005ம் வருடம் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடை) சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டமானது அவற்றின் தயாரிப்பை மட்டும் தடை செய்கிறது. இப்போது மத்திய அரசு பேரழிவு ஆயுதங்களுக்கும், அவற்றின் விநியோக முறைகளுக்கும் நிதி வழங்குவதை தடை செய்வதற்கு வகைசெய்து அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர விருப்பப்ட்டது. இதற்குரிய மசோதாவை மக்களவையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அறிமுகம் செய்து வைத்தார். இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்ட போது இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது, “அண்மை காலங்களில் பேரழிவு ஆயுதங்களின் பரவல் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் குறித்த சர்வதேச அமைப்புகளின் சட்டவிதிகள் விரிவடைந்துள்ளது. பேரழிவு ஆயுதங்கள் அவற்றின் விநியோக முறைகளின் பெருக்கத்துக்கு நிதி அளிப்பதற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு பேரழிவு ஆயுதங்களை பெருக்குவதற்கு நிதிஉதவி செய்வதற்கும், அவற்றின் விநியோக முறைகளுக்கும் எதிராக நம் சர்வதேச கடமைகளை நிறைவேற்றும் அடிப்படையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |