Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

மக்களிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் விஜய்…. ஏன் தெரியுமா?!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். சிவப்பு நிற காரில் ரசிகர்கள் படைசூழ நடிகர் விஜய் வாக்குச் சாவடியை வந்தடைந்த போது “அடுத்த முதல்வர் விஜய்” என்ற கோஷம் எழுப்பப்பட்டது. நடிகர் விஜய் காரில் இருந்து இறங்கி நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற போது அதிகளவில் கூட்டம் கூடியதால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அதனை கண்ட நடிகர் விஜய் மக்களிடம் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கோரினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் இந்த அணுகுமுறை அங்கு இருக்கக்கூடிய அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நடிகர் விஜய் காலையிலேயே வாக்களிக்க சென்றது மட்டுமில்லாமல் அனைவரையும் இருகரம் கூப்பி கும்பிட்டுக் கொண்டே சென்று ஒரு சாமானியனாக தன்னை காட்டிக் கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |