விஜய்சேதுபதி 800 படத்தில் இருந்து விலகியதற்காக பிரபல இயக்குனர் ஒருவர் வாழ்த்து தெரிவித்தாக தகவல் வெளிவந்துள்ளது.
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 800 படமானது இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக இருந்தது. இப்படதின் அறிவிப்பு வெளியாதில் இருந்து எதிர்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அது மட்டுமின்றி இந்த படத்தில் நடிக்கும் முடிவை விஜய்சேதுபதி விட்டுவிட வேண்டும் என இணை இயக்குனர் சீனு ராமசாமி , பாரதிராஜா, சேரன் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனிடை யே முரளிதரன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் 800 படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் முரளிதரன் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவரது அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டிருந்தார். இதன் மூலமாக விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிவிட்டதாக கருதப்படுகின்றது.
இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் விஜய் சேதுபதி விலகியதை தொடர்ந்து; ‘தனது ஹீரோ அந்தஸ்தை உயர்த்திக் காட்ட நினைக்காமல் எப்போதும் போல எளிமையாக நன்றி வணக்கம் என்று தன்னை நாடி வந்தவருக்கு விடை தந்து தமிழ் மக்களின் அன்புக்கு அமைதி வழியில் மேன்மை செய்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.